மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் புது மண்டபத்தில் அமைக்கபட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் CCTV கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மதுரை மாநகராட்சி காவல் ஆணையாளர் ராஜேந்திரன் ஆகியோர் இன்று(09.09.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு) சக்திவேல்
உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா, மாநகராட்சி துணை ஆணையாளர் ஜெய்னுலாப்தீன், மாநகர காவல் துணை ஆணையர்கள் ஏ.ஜி.இனிகோ திவ்யன்(தெற்கு),வனிதா,(மதுரை மாநகர போக்குவரத்து காவல்), இணை ஆணையர்செல்லத்துரை ஆகியோர் உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.