உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2 நாட்களாக போராட்டம்….
மதுரை திருநகர் ஹார்விபட்டியை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி விஜயலட்சுமி (21). இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது.
இதற்கிடையே திருமணமாகி 3 ஆண்டுகள் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி திங்கள் நள்ளிரவு 1.30 மணிக்கு விஜயலட்சுமி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.
திருநகர் போலீசார் விஜயலட்சுமி உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விஜயலட்சுமியின் உடலில் காயங்கள் உள்ளது. அவர் குரல்வளை நெறித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்
ஆனால் மதுரை RDO அலுவலக அதிகாரி ஒருவர் விஜயலட்சுமி மரணத்தில் சந்தேகம் இல்லை என்று பொய்யான அறிக்கை தயாரித்து கையெழுத்திடும்படி மிரட்டுவதாக உரவினர்கள் குற்றம் சாட்டி கடந்த 2 நாட்களாக விஜயலட்சுமி உடலை வாங்க மறுத்து போராடி வருகின்றனர்.