10 லட்சம் பனை விதைகள் நடும் பணியை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார்.
*********************************
மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியின் தொடர்ச்சியாக இந்த 2026-2027 ஆண்டு 10 லட்சம் பனை விதைகள் விதைக்கும் பணி துவக்க விழா, ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா, மற்றும் பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழாவினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தொடங்கி வைத்தார் பேசினார்.
தமிழ்நாட்டில் அழிந்து வரும் கற்பகதரு, கற்பக விருட்சம் என்று பெருமைக்குரிய போற்றக்கூடிய தமிழர்களின் தேசிய மரமான பனை மரத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற ஊயரிய நோக்கத்தோடு மதர் சமூக சேவை நிறுவனம் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும் பணியை கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கி தொடர்ந்து இயற்கை அறங்களை பாதுகாக்க, புயல், சூறாவளி, பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்க, கடற்கரை ஓரங்களிலும், தீவுப் பகுதிகளிலும், நீர்நிலைகளை பாதுகாக்க, கரைகளை வலுப்படுத்த, மண்ணரிப்பை தடுக்க, ஆற்றங்கரையோரங்களிலும், குளத்தங் கரையோரங்களிலும், வாய்க்கால்கள் கரையோரங்களிலும், நிலத்தடி நீரை மேம்படுத்த அரசு புறம்போக்கு இடங்களிலும், சாலைகளை பாதுகாக்க சாலையோரங்களிலும் சமூக அக்கறையோடு, சேவை மனப்பான்மையோடு, எந்த எதிர்பார்ப்புமின்றி தொடர்ந்து 8 ஆண்டுகளாக ஒரு கோடி பனைமர விதைகளை விதைக்கும் பணியினை தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு, கிரீன் தமிழ்நாடு மிஷன், பசுமை தமிழகம், மாவட்ட வனத்துறை, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் இந்த 2026-2027 ஆண்டில் 10 லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணியினணயும், மேலும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்க விழா மற்றும் பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அம்மன் புரம் அருகே உள்ள குரங்கன் தட்டு கிராமத்தில் சமுதாய நலக் கூடத்தில் வைத்து நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், நீர்நிலைகள் பாதுகாப்பு குழு தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பனை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து மேலும் சமுதாய நலக்கூட வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியிணையும், மற்றும் அதனைத் தொடர்ந்து இந்த 2026-2027 ஆண்டு10 லட்சம் பனைமர விதைகள் விதைக்கும் பணியை சீமவாடி குளத்தங்கறை ஓரத்தில் பனை விதையை விதைத்து, விதைக்கும் பணியையும் துவக்கி வைத்தார்.
முன்னதாக அமைச்சர் ஸ்ரீநாத்திற்க்கு ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி தலைமையில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி பூ கொத்து வழங்கி வரவேற்றார். பனை பொருள் உற்பத்தியாளர் குழு பெண்களால் பனை ஓலையில் தயாரிக்கப்பட்ட "பனை ஓலை மாலை"யை அணிவித்து,ராஜ கிரீடம் வைத்து, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில பொதுச் செயலாளர் சொ. சு. தமிழினியன் வரவேற்றார். வைத்தார். துணை தலைவர் ஏ. பொ. சுதாகர் முன்னிலை வைத்தார். திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்டோ வாழ்த்துரை வழங்கினார்.மதர் சமூக சேவை நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ் பானுமதி நன்றி கூறினார்.
இதில் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க துணைச் செயலாளர் ஆறுமுகப்பெருமாள்,
தமிழ்நாடு வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர் பிரைட்டர், ஒன்றிய செயலாளர் நீதி பால கார்த்தி, கிளைச் செயலாளர் வினோத், மகளிர் அணி செயலாளர் அதிர்ஷ்ட லட்சுமி, குரங்கன்தட்டு ஊர் தலைவர் அரவிந்த், செயலாளர் சுரேந்தர், துணைத் தலைவர் விக்னேஷ், கண்ணன், ராகினி, நதியா, அந்தோணி, மலையரசன் மற்றும் மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள், மதர் பனைப்பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், மதர் மகளிர் சுய உதவி குழு பெண்கள், ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.