எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ் ஆர் எம் யூ ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் முன்பு துணை பொது செயலாளர் வீரசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு வழங்கபட வேண்டிய NDA, OTA, TA/DA, NHA, Risk & Hardship Allowance, Special Gate Allowance, Controller Special Allowance, Patient Care Allowance, Nursing Allowance and Kilometer Allowance முதலிய இதர அலவன்ஸ்களை வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை பொதுச் செயலாளர் வீரசேகரன் கூறுகையில்....கடந்த வாரம் முதல் ஒவ்வொரு கோட்ட, கிளைகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பல்வேறு TA, DA, NHA, மருத்துவமனை சிறப்பு அலவன்ஸ்களை நிறுத்தி உள்ளது.
ரயில்வே நிர்வாக அதிகாரிகள் அரசின் பேச்சு கேட்டவுடன் அனைத்து அலவன்ஸ்களை நிறுத்தி சம்பளம் மட்டுமே ரயில்வே தொழிலாளர்களுக்கு வழங்குகின்றனர்.ஒரு வார காலத்திற்குள் சலுகைகளை வழங்கவில்லை என்றால் work to rule செல்வோம்.ஒன்றிய அரசு எல்லாவற்றையும் தனியார் மையமாக மாற்றி வருகிறது.
நேற்று முன்தினம் 15 வருடம் அனுபவமுள்ள ஏசி மெக்கானிக் தொழிலாளர்களை நிறுத்திவிட்டு ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களை சேர்த்துள்ளனர். இது பயணிகளின் உயிரோடு விளையாடும் செயலாகும்.எனவே, ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.கூடிய விரைவில் இது work to ruleலாக மாறும் என ரயில்வே நிர்வாகத்தை எச்சரிக்கிறோம் என தெரிவித்தார்.