போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை
நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையம்
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில், சிறுமிக்கு எதிரான பாலியல் குற்றத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3,000 அபராதமும் விதித்து நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 30/2022 ஆக பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில், POCSO Act பிரிவுகள் 8 r/w 7, 10 r/w 9(m) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 342, 447, 506(1) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரமேஷ் (எ) ரமேஷ் குமார், குணசேகரன் என்பவரின் மகன், தெற்கு தெரு, ராமர் மடம், பிரதம ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நாகப்பட்டினம் போக்சோ சிறப்பு நீதிமன்ற மாண்புமிகு நீதிபதி திரு. ஆர். ராஜ்குமார் MA.ML., அவர்கள் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகத் தீர்ப்பளித்து, எதிரிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.3,000/- அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 1 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கின் புலன் விசாரணையை நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சு. வேம்பரசி மேற்கொண்டார். வழக்கின் நீதிமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்ற காவலர் திருமதி R. தேவி, த.கா.1404 சிறப்பாக பணியாற்றினார்.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.