வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை…
போலீசார் நடத்திய சோதனையில் ஆன் லைன் வயிலாக ரூ.19 லட்சம் பண பரிமாற்றம் நடந்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு பேரூராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
இதன் படி வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையில் இன்ஸ்பெக்டர்
ரமேஷ் அடங்கிய பத்துக்கு மேற்பட்டவர்கள் மதியம் 2 மணிக்கு பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர் அலுவலகத்தில் நடைபெற்ற சோதனையின் போது, கணக்கில் வராத பணம் ரூ.8 ஆயிரத்து 200 மற்றும் ஆன்லைன் மூலம் ரூ.19 லட்சத்து 16 ஆயிரம்,100 பண பரிவர்த்தனை செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு மற்றும் ஒப்பந்த பணிகளுக்காக முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.