கொலை வழக்கில் குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல்
திருக்கண்ணபுரம் காவல் நிலைய குற்ற எண் 75/2019, u/s 174 CrPC @ 302 IPC கொலை வழக்கில், பரசுராமன் த/பெ. கலியமூர்த்தி, PSR காலனி தெரு, திருப்பெயத்தாங்குடி, திருக்கண்ணபுரம் என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இவ்வழக்கில் நாகப்பட்டினம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றத்தில் (FTC) இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
IPC 304(1) பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
மேலும், IPC 201 பிரிவின் கீழ் கொலை குற்றத்தை மறைத்ததற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதன்படி, குற்றவாளிக்கு மொத்தம் 12 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொலை மற்றும் கொடுங்க குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அவர்கள் தெரிவித்துள்ளார்.