வேளாங்கண்ணியில் பக்தர்களுக்கு தமிழக வெற்றி கழக சார்பில் சிறப்பு அன்னதானம், நீர்மோர் வழங்கல்
வேளாங்கண்ணி, செப். 5:
தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனையை முன்னிட்டு, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு பெருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப்.5) நடைபெற்றது.
நாகை மாவட்ட தமிழக வெற்றிக் கழகச் செயலாளர் மா. சுகுமார் தலைமையில், வேளாங்கண்ணி பேரூர் கழக மகளிரணி செயலாளர் ஜோஸ்பின் மேரி முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாங்கண்ணி ஜோஸ் ஜவுளிக்கடை ஆர்ச், மாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆண்டு பெருவிழாவிற்கு வந்த 2500 க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நாகை மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.