ஜோசியம் பார்த்து தான் எல்லாம் நடக்கிறது - கம்யூனிஸ்டு கட்சி முத்தரசன் பேச்சு
காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பை கர்நாடக அரசு மதித்து தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
முத்தரசன் பேச்சு :
விஜயை கர்நாடகாவிற்கு அம்மாநில அரசு அழைக்கவில்லை அவராகவே தான் செல்கிறேன் என்றார். இன்று அவரை வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் கூறி விட்டார். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயிகள் பேச்சை கேட்டு நான் கார்நாடகாவிற்கு போக மாட்டேன் என முதல்வர் விஜய் கூறி இருந்தால் அது கெளரவமாக இருந்திருக்கும் ஆனால் தற்போது கர்நாடக முதலமைச்சர் தமிழக முதலமைச்சரை வர வேண்டாம் என கூறி உள்ளார்.அழையா விருந்தாளி என்கிற நிலைமை ஆகி விட்டது. முதல்வருக்கு யார் ஆலோசனை கூறுகிறார் என தெரியவில்லை,
எந்த ஜோசியக்கார் இப்படி சொல்கிறார் என தெரியவில்லை.ஜோசியம் பார்த்து தான் எல்லாம் நடந்து கொண்டுள்ளது.
விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு : ஜனனி அழகிரி துணை நிர்வாக ஆசிரியர்